உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோடை வெயில் எதிரொலி; கொய்யாப்பழம் விலை உயர்வு

கோடை வெயில் எதிரொலி; கொய்யாப்பழம் விலை உயர்வு

திருப்பூர்; கோடை வெப்ப தாக்கம் அதிகமாக இருந்ததால், வரத்து குறைந்து, கொய்யாப்பழம் விலை திடீரென அதிகரித்துள்ளது.திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள பழங்கள் விற்கும் கடைகள், பழமுதிர் நிலையங்கள், ரோட்டோர கடைகளுக்கு, திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து, தினமும் கொய்யாப்பழம் விற்பனைக்கு வருகிறது.குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வரும் கொய்யாப்பழத்தின் மணமும், சுவையும் சிறப்பு வாய்ந்தது. இதன் காரணமாக, திண்டுக்கல், ஆயக்குடி கொய்யா, கிலோ 70 ரூபாய் வரை விற்கப்படும். மற்ற ரகங்கள், கிலோ 30 - 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.கடந்த மூன்று வாரங்களாக, வெயிலின் தாக்கம் திடீரென அதிகரித்தது. இதன் காரணமாக, கொய்யா பழங்கள் வெம்பியும், விரைவாக பழுத்தும் விற்பனைக்கு வந்தன. மேலும், பழங்கள் வரத்தும் குறைந்தது. இதன்காரணமாக, கொய்யாப்பழம் விலை திடீரென அதிகரித்தது.இதுகுறித்து கொய்யாப்பழ வியாபாரிகள் கூறுகையில், 'திண்டுக்கல், ஆயக்குடி பகுதி கொய்யாப்பழம், கிலோ, 130 ரூபாய் வரை விற்கப்பட்டது; சில நாட்கள், 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது; இன்று (நேற்று), கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தரமான பழங்கள் வரத்து அதிகரித்த பின், மீண்டும் விலை பழைய நிலைக்கு வந்தடையும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ