குண்டம் திருவிழா கடைகள் ரூ.56 லட்சத்துக்கு ஏலம்
அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது.கோவில் குண்டம் தேர் திருவிழா வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி கிராம சாந்தி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 8ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.திருவிழாவுக்கு திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.திருவிழாவின்போது, கோவில் வளாகத்தில் சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டு சாதனங்கள் மற்றும் தற்காலிக கடைகள் அமைத்து கொள்ள கோவில் நிர்வாகம் சார்பில், நேற்று டெண்டர் மூலம் ஏலம் நடத்தப்பட்டது.இதில், இதில் சிறுவர், சிறுமியர் விளையாட்டு சாதனங்கள் அமைக்க 46, லட்சத்து, 66 ஆயிரம் ரூபாய்க்கும், கடைகள் அமைக்க ஒன்பது லட்சத்து, 56 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது.ஏலம், அறநிலையத்துறை மாவட்ட துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன், தக்கார் சபரீஸ்குமார், ஆய்வாளர் தினேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.