சிவாகமம் உணர குருவருள், திருவருள் அவசியம்
திருப்பூர்:ஸ்ரீகுருகுலம் ஆகம வித்யார்த்திகள் சேவா சமிதி மற்றும் அதீத சாத்ரஸம்பத் பாடசாலை சார்பில், மாதம் தோறும் சிவாகம சிறப்பு சொற்பொழிவு நடந்து வருகிறது. அதன்படி, மூன்றாவது சிறப்பு சொற்பொழிவு, சிவன்மலை உஜ்ஜன் மஹாலில் நேற்று நடந்தது.கூனம்பட்டி ஆதீனம் ஸ்ரீசரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமை வகித்தார். கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள், மருதுறை ஆதீனம் அருண் ஆலாலா சுந்தர சுவாமிகள், அவிநாசி ஆரூரசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பெங்களூரு வேதபாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் தலைமையிலான, வேதம் பயின்றி மாணவர்கள், வித்யார்த்திகள் வேதாகமத்தை விளக்கி பேசினர். விழாவை ஸ்ரீகுருல ஆகம வித்யார்த்திகள் சேவா சமிதி, அதீத சாத்ர சம்ஸத் வேதாகம சமஸ்கிருத பாடசாலை, பெங்களூரு வாழும் கலை மையத்தினர் நடத்தினர். வித்யார்த்திகள், பல்வேறு புராணங்கள், வேத ஆகம வழிகாட்டுதல்களை விளக்கி பேசினர். ''சிவாகமம் குறித்து இன்றைய தலைமுறையினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குருவருளும், திருவருளும் இருந்தால் மட்டுமே, சிவாகமத்தை அறிய முடியும். சிவாகமம், திருமுறை பற்று இருந்தால் மட்டுமே, சிவ அனுபூதி என்ற சிவனடியாருக்கு நன்மை கிடைக்கும்' என்று அருளாசி வழங்கினர். சென்னை விவேகானந்தா கல்லுாரி பேராசிரியர் அபிராமசுந்தர சிவாச்சாரியார், விழாவை ஒருங்கிணைத்தார். சிவன்மலை சிவசுந்தரசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.--சிவன்மலை உஜ்ஜன் மஹாலில், சிவாகம சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கூனம்பட்டி ஆதீனம் ஸ்ரீசரவண மாணிக்கவாசக சுவாமிகள், கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள், மருதுறை ஆதீனம் அருண் ஆலாலா சுந்தர சுவாமிகள், அவிநாசி ஆரூரசிவம், பெங்களூரு வேதபாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.