உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இடியும் நிலையிலுள்ள வீடுகளை சீரமைக்க வேண்டும்!

இடியும் நிலையிலுள்ள வீடுகளை சீரமைக்க வேண்டும்!

திருப்பூர்; ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள், பஸ் வசதி, இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை பூர்த்தி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி தலைமை வகித்தார்.அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள், கிருஷ்ணமூர்த்தி, வேலுசாமி, வக் கீல் சகாதேவன் பங்கேற்று, கோரிக்கைகள், பிரச்னைகள் குறித்து பேசினர்.நலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:திருப்பூர் - வலுப்பூரம்மன் கோவில் வரை இயக்கப்படும் 3/24 எண் கொண்ட அரசு பஸ், வலுப்பூரம்மன் கோவில் வரை சென்று திரும்பிவிடுகிறது. மாணவர்கள், தொழிலாளர் நலன்கருதி, இந்த பஸ்சை கூடுதலாக, 2 கி.மீ., துாரத்துக்கு, தாயம்பாளையம் வரை இயக்க வேண்டும். 'தாட்கோ' கடன் கேட்டு விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு, காலதாமதமின்றி கடன் வழங்கப்படவேண்டும்.பொங்கலுார் ஒன்றியம், அலகுமலை, கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம், தொங்குட்டிபாளையம் ஊராட்சிகளில், ஏழை மக்கள் வசிக்கும் காலனிகளில், 30 ஆண் டுக்கு முன் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் இடிந்து விழும் சூழலில் உள்ளன. ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து, வீடுகளை பழுது நீக்கம் செய்து கொடுக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.வக்கீல் சகாதேவன் பேசுகையில், ''அவிநாசி ஒன்றியத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். மயானத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும்,'' என்றார்.வேலுசாமி பேகையில், ''மாவட்டம் முழுவதும் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ள ஆதிதிராவிட மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கவேண்டும். பட்டா வழங்கப்பட்டு பல ஆண்டுகளாகியும், நிலத்தை அளவீடு செய்து கொடுக்காததால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். உடனடியாக பட்டா நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும்,'' என்றார்.இவ்வாறு, நலக்குழு உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ