நான் முதல்வன் - உயர்வுக்குப் படி
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட நிர்வாகம், 'நான் முதல்வன் - உயர்வுக்குப் படி' சிறப்பு முகாம், திருப்பூர், குமரன் மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வசந்தி வரவேற்றார். 'உயர்கல்வியின் முக்கியத்துவம் அவற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகள்' எனும் தலைப்பில், சப்- கலெக்டர் சவுமியாஆனந்த் பேசினார்.கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி, ''தமிழக அரசு கல்விக்கு வழங்கி வரும் முக்கியத்துவம், அவற்றின் மூலம் கல்வி கற்போருக்கு கிடைக்கும் நன்மை,''குறித்து பேசினார்.தொழிற்கல்வி வாயிலாக கிடைக்கும் வேலைவாய்ப்பு குறித்து, திருப்பூர் ஐ.டி.ஐ., முதல்வர் பிரபு, கல்விக்கடன் மற்றும் கல்வி உதவி திட்டம் குறித்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாலாஜி பேசினர். பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ்அகமதுபாஷா ஆகியோர் விளக்கமளித்தார்.வணிக நிர்வாகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவி கோபிகா, 'வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் கல்வி இன்றியாமையாதது,' எனும் தலைப்பில் பேசினார். 'நான் முதல்வன்' திட்ட மாவட்ட அலுவலர் ஓம்பிரகாஷ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ், குமரன் கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ், துறைத் தலைவர், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாணவியர் பேரவை பொறுப்பாளர் பொன்மலர் நன்றி கூறினார்.