உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்ட பாரதிய மஸ்துார் பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அனுப்பர்பாளையம் அடுத்த ஆத்துப்பாளையத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வைத்தார். மாநில துணைத்தலைவர் பிரபு, செயல் தலைவர் செந்தில், மாவட்ட செயலாளர் மாதவன், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாத்திர தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். பாத்திர தொழிலாளர்களுக்கு கண் கண்ணாடி, முகக் கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை மாநில அரசு வழங்க வேண்டும். வரும் 23ல், பாரதிய மஸ்தூர் சங்கத்தின் 70 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 23 இடங்களில் கொடியேற்று விழா நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ