உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இடையூறாக நிறுத்தப்படும் பஸ்கள் 

இடையூறாக நிறுத்தப்படும் பஸ்கள் 

திருப்பூர்;திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் தனியார் பஸ்கள் ரேக்கை விட்டு வெளியே இடையூறாக நிறுத்துவதால், பிற பஸ்கள் கடந்து செல்லவும், பயணிகள் பஸ்சில் ஏறவும் இடையூறு ஏற்படுகிறது.திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, அவிநாசி வழி கோவை, கோபி, சத்தி, அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ் இயக்கப்படுகிறது.பஸ் ஸ்டாண்டில் ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் பஸ்கள் நிற்க தனித்தனி ரேக் ஒதுக்கப்பட்டுள்ளது.மதுரை, தேனி மார்க்கமாக செல்லும் பஸ்கள் கோவில்வழி பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றப்பட்ட பின், ஒரு புறம் (இடது பகுதி) முழுதும் காலியாக உள்ளது. வலது புற ரேக்கில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. போதிய இடவசதி இருந்தும், குறிப்பிட்ட சில பஸ்கள் ரேக்கில் நிறுத்தாமல், நடுவழியில் நிறுத்தப்படுகிறது.நடுவழியில் டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி விட்டு சென்று விடுவதால், பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் வெளியேற இடையூறு ஏற்படுகிறது. தவிர, பயணிகள் பஸ் ஏறவும் தடுமாறு கின்றனர். பஸ் ஸ்டாண்டில் அரசு, தனியார் பஸ்கள் ரேக்கில் நிற்பதை போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப் படுத்த வேண்டும்; போக்குவரத்து போலீசாரும் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை