இலவச பயிற்சியில் சேர இன்று நேர்காணல்
திருப்பூர்:திருப்பூர் - அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம் புதுாரில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு நிலையத்தில், இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.ஏ.சி., - பிரிட்ஜ், வாஷிங் மெஷின் பழுதுபார்ப்பது மற்றும் சர்வீஸ் செய்வது குறித்து 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கான நேர்காணல், கோவை டிபார்ட்மென்ட் ஸ்டோர் காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளத்தில் உள்ள சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெறுகிறது. இப்பயிற்சி முடிப்போருக்கு, மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 94890 43923, 99525 18441 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.