உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடைத்துறை அடிப்படை நிலைத்தன்மை இ-லேர்னிங் அறிமுகம்

ஆடைத்துறை அடிப்படை நிலைத்தன்மை இ-லேர்னிங் அறிமுகம்

திருப்பூர்: ஆடைத்துறை அடிப்படை நிலைத்தன்மை குறித்த 'இ-லேர்னிங்' திருப்பூரில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.ஏ.எம்.ெஹச்.எஸ்.எஸ்.சி., எனப்படும், ஆயத்த ஆடை, அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரம் துறை திறன் கவுன்சில், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த புளூைஷன் நிறுவனம் ஆகியன இணைந்து இந்திய ஆடை துறையில் நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தின. பாடத்திட்டம் வெளியீட்டு விழா திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.கவுன்சில் தலைவர் சக்திவேல் வரவேற்று பேசுகையில், ''இந்தப் பாடநெறி குறிப்பிடத்தக்க படியாகும். இந்த முன் முயற்சி தொழில் வல்லுனர்களுக்கு, சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்கான அறிவை வழங்கும்; மேலும், உலகளாவிய தரநிலைகளை அறிய உதவும்.இதன் மூலம், ஆடைத்துறைக்கு இந்த புதுமையான கற்றல் அனுபவத்தை கொண்டு வரும். ஜவுளித் தொழிலில் நிலைத்தன்மையும் இதனால், உருவாகும்'' என்றார்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ர மணியன் பேசுகையில், ''இ-லேர்னிங் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவது பின்னலாடை தொழில்துறைக்கு, குறிப்பாக திருப்பூருக்கு தேவையான ஆதாரமாகும்.தொழில்துறையினர் தங்கள் செயல்பாடுகளில் நிலைத்தன்மை மற்றும் சுற்றுசூழல் நட்பு நடைமுறைகளை செயல்படுத்துவதற்கான புரிதலை மேம்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்'' என்றார்.புளூைஷன் நிறுவன தெற்காசிய மண்டல இயக்குனர் கேத்ரீனா வெர்னா மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஏ.எம்.ெஹச்.எஸ்.எஸ்.சி., தலைமை செயல் அதிகாரி டாக்டர் விஜய்குமார் யாதவ் நன்றி கூறினார்.பாடத்திட்டம் என்ன?ஏழ்மையை ஒழித்தல், ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் பாலின சமத்துவத்தை அடைதல் போன்ற உலகளாவிய இலக்குகளுடன் ஒத்துபோவதற்காக, 'அடிப்படை நிலைத்தன்மைக்கு அடித்தளம்' என்ற பாடத்திட்டம் இலக்குகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது பசுமைக்குடில் வாயு உமிழ்வு, நீர் பற்றாக்குறை மற்றும் மாசு உள்ளிட்ட முக்கிய சுற்றுச்சூழல் பிரச்னைகளையும், வேலை நிலைமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் போன்ற சமூக பிரச்னைகளையும் தீர்க்கும். நிலையான பொருட்கள், சூழல் நட்பு உற்பத்தி செயல்முறைகள் மற்றும் உலகளாவிய நிலைத்தன்மை தரநிலை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை பாடத்திட்டம் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ