உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடுகளை காப்பாற்ற இரும்பு பட்டி; எடுபடாத அமைச்சர் யோசனை

ஆடுகளை காப்பாற்ற இரும்பு பட்டி; எடுபடாத அமைச்சர் யோசனை

திருப்பூர்; 'நாய்களிடம் இருந்து ஆடுகளை காப்பாற்ற, இரும்பு பட்டி அமைக்கும் யோசனையால், மண் வளத்தை பாதுகாக்கும் பாரம்பரிய விவசாய முறை பாதிக்கும்' என, விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், தெரு நாய்கள் கடித்து ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாவது அதிகரித்து வருகிறது. விவசாய தோட்டங்களில், மூங்கிலால் பட்டி அமைக்கப்பட்டு, அதில் ஆடு, கோழிகள் உள்ளிட்டவை வளர்க்கப்படும் நிலையில், பட்டியின் அடிப்பகுதியில் உள்ள மண்ணை தோண்டும் நாய்கள், துளை ஏற்படுத்தி உள்ளே புகுந்து, ஆடுகளை கடிக்கின்றன. இப்பிரச்னைக்கு தீர்வாக, இரும்பு கம்பி வலை உதவியுடன் பட்டி அமைக்க, அமைச்சர் முத்துசாமி சமீபத்தில் யோசனை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி கூறியதாவது:பகல் நேரத்தில் மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகள், இரவில் வயலின் மைய பகுதியில் பட்டி அமைத்து, அதில் அடைக்கப்படும். ஆட்டுப்புழுக்கை, சிறுநீர் ஆகியவை மண்ணுக்கு நல்ல உரம்; அவை அந்த மண்ணில் மக்கி, மண் வளத்தை மேம்படுத்துகின்றன. இது தான் பாரம்பரிய விவசாய முறை.இரும்புக்கம்பியால் தயாரிக்கப்படும் நிரந்தர ஆட்டுப்பட்டியால், இந்த விவசாய முறை பாதிக்கும். மேலும், நடமாடும் ஆட்டுப்பட்டி அமைக்கும் தொழிலில் ஈடுபடுவோரின் வருமானமும் தடைபடும்.தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதை தவிர்த்து, பாரம்பரிய விவசாய முறைக்கு வேட்டு வைக்கும் பரிந்துரையை அமைச்சர் வழங்குவது ஏற்புடையதல்ல. ரோட்டில் தலைவர்களின் சிலையை நிறுவி, அதை சுற்றி கம்பி வேலியால் கூண்டு அமைப்பது போன்றது தான் இது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ranjith ranjith
பிப் 26, 2025 16:09

இங்கு இருக்கா கூடிய தெரு நாய்கள் அனைத்தும் பீகார், ஜார்கண்ட், அஸ்ஸாம் மாநிலத்தில் கொண்டு போய் விடுவது நல்லது , ஏன் என்றால் திருப்பூர் இல் ஹிந்தி கரான் தான் அதிகம் இருக்கராணுக அப்போ அங்க ஜனத்தொகை கட்டுப்பாட்டை கரைக்க்கட இருக்கும் இங்கு உள்ள தெரு நாய்கள் கொண்டு சென்றால் = பண்ணிக்கலாம்


N Sasikumar Yadhav
பிப் 25, 2025 20:45

நாய்கள் கட்டுப்பாட்டுக்கு வருடாவருடம் பட்ஜெட்டில் பணம் ஒதுக்குகிறார்களே அதை செலவு செய்யாமல் விஞ்ஞானரீதியாக கோபாலபுர குடும்பத்துக்கு ஒதுக்கி கொள்கிறார்களோ என்னவோ


தமிழன்
பிப் 25, 2025 15:22

தெர்மாகோல் விஞ்ஞானியின் கூட பொறந்தவன் போல அதான் இப்படி


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
பிப் 25, 2025 09:40

இத மாதிரி மாடுகள் ஆட்சி செய்தால் நாடு எப்படி உருப்படும்? எளிதான வேலையான வெறிநாய்களை கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு பல லட்சங்கள் செலவு செய்து இரும்பு கூண்டு அமைக்கிறார்களாம். என்னே அறிவு?


சமீபத்திய செய்தி