மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி., கார்டு
31-Aug-2024
திருப்பூர்;திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், புதிய உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, பகுதி வாரியாக நடந்து வருகிறது.ராக்கியாபாளையம் பிரிவு, தங்கவேல் மண்ட பத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், நல்லுார் பகுதிக்கு உட்பட்ட, 46, 47, 48, 49வது வார்டுகளை சேர்ந்த, கட்சி உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டை வினியோகம் துவக்கி வைக்கப்பட்டது. ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அடையாள அட்டை வழங்கும் பணியை துவக்கி வைத்து பேசுகையில், ''அடையாள அட்டையை, வீடு வீடாக சென்று வழங்க வேண்டும். பூத் கமிட்டிகள் விரைவில் கிளை கமிட்டிகளாக மாற்றப்பட வாய்ப்புள்ளது.எனவே, அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் கட்சி நடத்தும் போராட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்று ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
31-Aug-2024