குறுமைய மாணவியர் வாலிபால்: திறமை காட்டி அசத்திய அணிகள்
திருப்பூர்;திருப்பூர் வடக்கு குறுமைய மாணவியர் வாலிபால் போட்டி, சிறுபூலுவபட்டி, ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.பள்ளி செயலாளர் கீர்த்திகாவாணி, பள்ளி முதல்வர் மணிமலர் போட்டிகளை துவக்கி வைத்தனர். குறுமைய கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஜெரால்ட், இளங்கோவன் ஒருங்கிணைத்தனர். குறுமைய இணை செயலாளர்கள் உமா, ஜெயலட்சுமி, சவுமியா நடுவர்களாக போட்டிகளை நடத்தினர்.இதில், 14 மற்றும் 17 வயது பிரிவில் தலா, 14, 19 வயது பிரிவில், எட்டு அணிகள் பங்கேற்றன. பதினான்கு வயது பிரிவு இறுதி போட்டியில், திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி - எம்.எஸ்., நகர், விகாஸ் வித்யாலயா ஜூனியர் அணியை, 2 - 0 என்ற செட் கணக்கில் வென்றது.அடுத்து, 19 வயது பிரிவு இறுதி போட்டியில், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், இன்பான்ட் ஜீசஸ் பள்ளி அணியை வென்றது.போதிய நேரமின்மை காரணமாக, 17 வயது பிரிவுக்கான இறுதி போட்டி ஒத்திவைக்கப்பட்டது. போட்டியில் விறுவிறுப்பு
பத்தொன்பது வயது பிரிவுக்கான முதல் போட்டியில், குறுமைய போட்டிகளை நடத்தும் ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளி - ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி இடையே நடந்தது. முதல் இரண்டு செட்டுகளில் ஒன்றை ஜெய்வாபாய், இன்னொன்றை ஜெய்சாரதாவும் கைப்பற்றின. மூன்றாவது செட்டில் ஜெய்வாபாய் பள்ளி மாணவியர், 16 - 14 என்ற புள்ளிகணக்கில், இறுதி சுற்றுக்குள் நுழைந்து, வெற்றியும் பெற்றனர்.