உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கரடிவாவி நுாலகம் 5 ஆண்டாக தொடர் முதலிடம்

கரடிவாவி நுாலகம் 5 ஆண்டாக தொடர் முதலிடம்

பல்லடம்; மாவட்ட அளவிலான சிறந்த நுாலகங்களில், கரடிவாவி கிளை நுாலகம், ஐந்து ஆண்டுகளாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, கரடிவாவி கிளை நூலகம், கடந்த, 2021ம் ஆண்டு, மாவட்ட அளவில் சிறந்த கிளை நுாலகம் என்ற விருதினை பெற்றது. இந்நுாலகம், கடந்த ஐந்து ஆண்டு களாக சிறந்த கிளை நூலகமாக முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது.கடந்த, 2021ம் ஆண்டு, 99 புரவலர்கள், 700க்கும் அதிகமான உறுப்பினர்களுடன் இருந்த இந்த நுாலகம், மாவட்ட அளவில் சிறந்த நுாலகத்துக்கான விருதைப் பெற்றது.தற்போது, இந்நுாலகத்தில், 16033 புத்தகங்கள், 3,529 உறுப்பினர்கள், ஆயிரம் ரூபாய் சந்தா செலுத்திய, 282 புரவலர்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் சந்தா செலுத்திய இரண்டு புரவலர்களும் உள்ளதாக, நுாலகர் தனபாக்கியம் தெரிவித்தார்.இவ்வாறு, புரவலர்கள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்த நிலையில், மாவட்ட அளவில், கரடிவாவி கிளை நுாலகம் இன்றும் முதல் இடத்தை தக்கவைத்து, கிராமத்துக்கு பெருமை சேர்த்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை