மாவட்ட செஸ் போட்டிக்கு தகுதி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
உடுமலை:மாவட்ட அளவிலான செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு, பெதப்பம்பட்டி அரசுப்பள்ளியில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, குடிமங்கலம் ஒன்றிய அளவிலான செஸ் போட்டிகள் உடுமலையில் நடந்தது. இதில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர்.மாணவர் மிக மூத்தோர் பிரிவில், பிளஸ் 2 மாணவன் புகழேந்தி முதலிடத்தையும், மாணவியர் மிக மூத்தோர் பிரிவில், பிளஸ் 1 மாணவி, பிரியா முதலிடத்தையும், அதே பிரிவில், பாவனா மூன்றாமிடமும் பெற்றனர்.மாணவியர் மூத்தோர் பிரிவில், பத்தாம் வகுப்பு மாணவி, நித்யாசெல்வி முதலிடமும் பெற்று திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டினர்.