மேலும் செய்திகள்
போக்குவரத்து கழகங்களில் 5 அதிகாரிகள் இடமாற்றம்
31-Jul-2024
திருப்பூர்: ''அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் டிரைவர், நடத்துனர் உட்பட தொழிலாளர்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில்,தொழிலாளர் வீட்டு விசேஷங்களில், கிளை மேலாளர்கள் பங்கேற்க வேண்டும்'' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், கும்பகோணம், விழுப்புரம் மற்றும் சென்னை மாநகரம் என எட்டு கோட்டங்களை உள்ளடக்கியது, அரசு போக்குவரத்து கழகம். டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் துவங்கி, பல்வேறு நிலைகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தரப்பில் இருந்து, அனைத்து கோட்ட மேலாளர், கிளை மேலாளர்களுக்கு பகிரப்பட்ட சுற்றறிக்கை:போக்குவரத்து கழகத்தின் வளர்ச்சிக்கு நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தொழிலாளருடனான நல்லுறவை மேம்படுத்த தொழிலாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் திருமணம், இதர வீட்டு விசேஷங்களில், அந்தந்த கிளை மேலாளர்கள் மற்றும் பிரிவு பொறுப்பு அலுவலர்கள் அல்லது மேற்பார்வையாளர்கள் தவறாமல் நேரில் பங்கேற்க வேண்டும். முன்கூட்டியே, 1,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்முதல் செய்து, போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில் பரிசாக வழங்க வேண்டும். திருமண விழா, பிறந்த நாள் விழாவினை முன்கூட்டியே அறிந்து, தகவல் பலகை மூலமாகவும், நேரிலும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்இவ்வாறு, சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுற்றறிக்கை ஏன்?
''போக்குவரத்து கழகத்தில் ஏதேனும் ஒரு பிரச்னையென்றால், அது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. ஓரிரு நபர்களால் ஒட்டுமொத்த துறைக்கும், பணிபுரிவோருக்கு தேவையில்லாத அவப்பெயர் ஏற்படுகிறது. உயரதிகாரிகள், அமைச்சர் வரை பதில் சொல்ல வேண்டியுள்ளது. அதிகாரி - ஊழியர் இடையே அவ்வப்போது ஏற்படும் மோதல் போக்கை தவிர்க்க, அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்கின்றனர் போக்குவரத்து உயரதிகாரிகள்.
31-Jul-2024