உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களிடம் தலைமைப்பண்பு துவக்கத்திலேயே வளர வேண்டும்

மாணவர்களிடம் தலைமைப்பண்பு துவக்கத்திலேயே வளர வேண்டும்

திருப்பூர்; பாண்டியன் நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா, இலக்கிய விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் சின்னக்கண்ணு தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜோசப் முன்னிலை வகித்தார்.முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் பேசுகையில், ''ஒவ்வொரு துவக்கப்பள்ளி மாணவர்களிடம் தலைமை பண்பு ஆரம்பத்திலேயே வளர வேண்டும். மாணவர்கள் இடைநிற்காமல் உயர்கல்வியை தொடர வேண்டும் என்பதற்காகவே பல்வேறு சலுகை, நலத்திட்டங்களை தொடர்ந்து அரசு வழங்கி வருகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை உரிய நாட்களில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில் சேர்க்க வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பின் அது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். அட்மிஷனுக்கு பெற்றோர் உதவ வேண்டும்'' என்றார்.தமிழ் இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) பழனி பரிசு வழங்கி, பாராட்டினார்.கவுன்சிலர் மாலதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி