உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சகல தோஷம் போக்கும் சர்ப்ப விநாயக பெருமான்

சகல தோஷம் போக்கும் சர்ப்ப விநாயக பெருமான்

அவிநாசி அருகே சேவூர் - தாளக்கரையில் அருள்பாலிக்கும், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் கோவில், வியாசராஜரால், 900 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. மூலவர் சன்னதியின் வலது புறத்தில் சர்ப்ப விநாயகர் அமைந்துள்ளது. எந்த ஒரு பெருமாள் கோவிலிலும் இத்தகைய கோலத்தில் விநாயகரை காண்பது அரிது. அதிலும், தமிழகத்தில் காண்பது மிகமிக அரிது. விநாயக பெருமானின் சிரத்துக்கு மேல், ஆதிசேஷன் குடையாக அமைந்துள்ளதால், இவர் சர்ப்ப விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரை வழிபட்டால் திருமணம் தடை நீங்கள், புத்திர பாக்கியம் கிடைக்கும், தொழில் அமையும், கடன் பிரச்னை தீரும் என்பதற்கு கோவிலுக்கு படை திரண்டு வரும் பக்தர்களே சாட்சியாக உள்ளனர். ராகு, கேது, செவ்வாய் கிரகங்களால் பாதகமான பாதிப்புகளை எதிர்கொள்பவர்களும் குழந்தைகளின் நலன் மேல் அக்கறை உள்ளவர்களும் சர்ப்ப விநாயகர் பெருமானை வழிபட்டு நிவர்த்தி அடைகின்றனர். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பூஜையில் களத்திர தோஷம், புத்திர பாக்கியம், தொழில், கடன் பிரச்னை ஆகியவை தீருவதற்கான சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை