உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்கள் சாதனைக்கு பின் இருப்பது ஆண்களே!

பெண்கள் சாதனைக்கு பின் இருப்பது ஆண்களே!

பல்லடம் நகராட்சி பெண் கவுன்சிலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, என்.ஜி.ஆர்., ரோட்டில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.நகராட்சித் தலைவர் கவிதாமணி தலைமை வகித்து பேசுகையில், '' பெண்களாக பிறந்து இவ்வளவு துாரம் எங்களால் சாதிக்க முடிகிறது என்றால், எங்களுக்கு பின்னால் உள்ள ஆண்களாகிய நீங்களும் தான் இதற்கு காரணம். உளி போல் எங்களை செதுக்கவில்லை என்றால், பெண்களாகிய நாங்கள் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது. முன்னேறி செல்வதற்கு உண்டான வழியை வகுத்துக் கொடுத்து, எங்களுக்கு பின்னால் ஊன்றுகோலாக நின்று எங்களை வழிநடத்திச் செல்லும் ஆண்களுக்கு தான் நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இன்று மகளிர் தினமாக இருந்தாலும், எங்களையும் நம்பி, பொறுப்புகளை வழங்கி, இந்த அளவுக்கு உயர்த்தியதற்கு காரணமே நீங்கள்தான். உங்களாலும் முடியும் என பொறுப்பை ஒப்படைத்ததற்கு நன்றி கூறிக் கொள்கிறோம்,'' என்றார்.முன்னதாக, மகளிர் தினத்தை முன்னிட்டு, நகராட்சி பெண் கவுன்சிலர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து விருது வழங்கப்பட்டது. ரோட்டரி ரெயின்போ பட்டய தலைவர் நடராஜன், ஆறுமுகம், கோடங்கிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிசாமி, மருத்துவர் ராஜ்குமார் மற்றும் வியாபாரிகள் சங்க செயலாளர் பானு பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை