எலி பேஸ்ட் சாப்பிட்ட தாய் பலி மகன் சீரியஸ்
திருப்பூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மாலா, 36. இவரது கணவர் அருண்குமார் இறந்து விட்டார். மகன் சுஜித்குமார், 11. மாலா, திருப்பூர், மங்கலம் ரோடு, கோழிப்பண்ணை அருகில் தங்கி, பனியன் நிறுவனங்களில் டீ வியாபாரம் செய்து வந்தார்.கணவர் இறந்ததால் ஏற்கனவே மனமுடைந்த நிலையில் இருந்த மாலா, எலி பேஸ்ட் சாப்பிட்டு, மகனுக்கும் கொடுத்துள்ளார். இதையறிந்த அருகில் உள்ளோர், இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இருவரில், சிகிச்சை பலனின்றி மாலா இறந்தார். அவரது மகன் சிகிச்சை பெற்று வருகிறார்.