உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சத்துணவு முட்டை உரிக்க இயந்திரம்

சத்துணவு முட்டை உரிக்க இயந்திரம்

திருப்பூர்: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்கப்படுகிறது. அதிகளவு மாணவர்களை உடைய மையங்களில் பணிபுரியும் சமையலர்கள், சேதமாகாமல் முட்டைகளை உரிக்க சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க, அதிகளவில் பயனாளிகளை கொண்ட பள்ளி சத்துணவு மையங்களுக்கு, நவீன முட்டை உரிக்கும் இயந்திரம் வாங்க சமூக நலத்துறை முடிவு செய்து உள்ளது. முதல்கட்டமாக, அதிக மாணவ, மாணவியரை கொண்ட, 400 மையங்களுக்கு இயந்திரம் வழங்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சமூக நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அனுமதி கிடைத்த பின், டெண்டர் விடப்பட்டு, சத்துணவு மையங்களில் முட்டை உரிக்கும் இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை