மாநில கால்பந்து போட்டிக்கு என்.வி., பள்ளி மாணவி தகுதி
உடுமலை;மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ள மாணவிக்கு, பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.கோவையில், இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் சார்பில் கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளடங்கிய மண்டல அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.இப்போட்டியில், பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி மிருதுளா 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.தொடர்ந்து மாநில அளவிலான போட்டிக்கும், தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.