உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்பு; கைவிரிக்கும் அதிகாரிகள்

ஆக்கிரமிப்பு; கைவிரிக்கும் அதிகாரிகள்

திருப்பூர் : இந்திய தேசிய லீக் கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் அஸ்லம் கூறியதாவது:திருப்பூர், காங்கயம் கிராஸ் ரோடு பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்த நிலத்துக்கு கிரய தொகையை நெடுஞ்சாலைத் துறை வழங்கியுள்ளது. வடிகால் மீது பெரும்பாலானோர் கடைகளை அமைத்து அதை வியாபார ஸ்தலமாக மாற்றி விட்டனர். வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்படுகிறது. கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட பணி தனி நபர்களுக்கு மட்டுமே பயன்படும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் மாறி விட்டது. இந்த ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் பிரச்னைகள், அவதிகள் குறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, மாநகர போலீஸ் துறை உள்ளிட்ட துறைகள் அடுத்தவரைக் கை காட்டி தப்பித்துக் கொள்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை தடுப்பது என்ன என்பது மர்மமாக உள்ளது.இந்த நிலை தொடருமானால், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !