உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓணம் ஆர்டர் நழுவியது; தீபாவளி கைகொடுக்குமா?

ஓணம் ஆர்டர் நழுவியது; தீபாவளி கைகொடுக்குமா?

திருப்பூர் : ஓணம் பண்டிகை ஆர்டர் கை நழுவிப்போனாலும், தீபாவளி ஆர்டர் திருப்பூருக்கு கை கொடுக்குமா என, பின்னலாடை உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுக்கு, வருடாந்திர வாய்ப்பாக அமைகிறது. ஆண்டுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உள்நாட்டு வர்த்தகம் நடக்கும் நிலையில், பண்டிகை கால ஆர்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெற்றதும், தீபாவளி ஆர்டர் திருப்பூரை நோக்கி பறந்து வரும். அடுத்த, 10 முதல் 15வது நாட்களில் இருந்து, ஆயத்த ஆடை, பின்னலாடைகள், உள்ளாடைகள், அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

வயநாடு நிலச்சரிவால் கிடைக்காத ஆர்டர்

தீபாவளிக்கு முன்னதாக, கேரளாவில் ஓணம் பண்டிகை ஆர்டர் முன்னோட்டமாக இருக்கும். இந்தாண்டு, வயநாடு நிலச்சரிவு காரணமாக, ஓணம் பண்டிகை ஆர்டர்கள் திருப்பூருக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, தீபாவளி ஆர்டர் மட்டுமே பிரதானம் என, எதிர்பார்ப்புடன் உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர்.ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உள்ளாடைகள், ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்து இருப்பு வைக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்காக, 20 சதவீதம் கூடுதலாக தயார் செய்யப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை மற்றும் 'டி-சர்ட்' உள்ளிட்ட பின்னலாடைகள், ஆர்டர் அடிப்படையில் தயாரித்து, வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.கடந்தாண்டு ஏற்பட்ட சவால்கள் மறைந்து, நுால் விலையும் நிலையாக இருக்கிறது; இந்தாண்டு தீபாவளி பண்டிகை திருப்பூருக்கு கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்புடன், உற்பத்தியாளர்கள் ஆர்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ