உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்லுாரி வளாகத்தில் பழத்தோட்டம் தோட்டக்கலை துறை அட்வைஸ்

கல்லுாரி வளாகத்தில் பழத்தோட்டம் தோட்டக்கலை துறை அட்வைஸ்

பல்லடம்;அரசு கல்லுாரி வளாகத்தில், பழத்தோட்டம் அமைக்கும் திட்டம் குறித்து, பல்லடம் தோட்டக்கலைத்துறை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியது.தமிழக அரசு, தோட்டக்கலைத்துறை மூலம், அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் தோட்டம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பல்லடம் அரசு கல்லுாரி வளாகத்தில், பழம் மற்றும் காய்கறி தோட்டம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, அரசு கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை பேராசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் உமாசங்கரி முன்னிலை வகித்தார்.முன்னதாக, மா, நெல்லி, வாழை, சப்போட்டா, கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு வகை பழ வகை மரங்கள் மற்றும் முள்ளங்கி, முருங்கை, கீரை வகைகள் மற்றும் துளசி, கற்பூரவல்லி, கற்றாழை, பிரண்டை உள்ளிட்டவை நடவு செய்யப்பட்டன. இவற்றை பராமரிக்க தேவையான உபகரணங்களும் கல்லுாரிக்கு வழங்கப்பட்டது.தொடர்ந்து, பழங்கள், கீரை மற்றும் மூலிகை செடிகள் ஆகியவற்றின் பலன்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் யாழினி, மோகனாம்பிகை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை