உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பராமரிக்க வேண்டிய கட்டடம் அறிக்கை அளிக்க உத்தரவு 

பராமரிக்க வேண்டிய கட்டடம் அறிக்கை அளிக்க உத்தரவு 

திருப்பூர்:'அரசு பள்ளிகளில் தற்காலிக பராமரிப்பு தேவைப்படும் வகுப்பறைகள் மற்றும் கட்டடங்களில் விபரங்களை சமர்பிக்க வேண்டும்,' என, தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.'அரசு பள்ளிகளின் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய வேண்டும்; தற்காலிக பராமரிப்பு பணி தேவைப்பட்டால் பொதுப்பணித்துறை அல்லது தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் ஒத்துழைப்புடன் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,' என, தொடக்க கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.மாவட்ட அளவில் அமைக்கப்படும் குழுவினர், பள்ளிகளில் ஆய்வு நடத்தி விபரங்களை மாவட்ட தொடக்க கல்வித்துறைக்கு விரைவில் சமர்ப்பிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !