பல்லடம் எஸ்.வி., கிளினிக் இலவச மருத்துவ முகாம்
திருப்பூர்; பல்லடம், எஸ்.வி., கிளினிக் மருத்துவ நிபுணர் முரளி கூறியதாவது:அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளும் மிகச் சிறிய முயற்சி, உடல் நலனுக்கு மிகப்பெரும் பாதுகாப்பை அளிக்கும். உணவு உண்ணும் முன் இது ஆரோக்கிய உணவா என்று சிந்திப்பது அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு குறைவான உணவுகள், அதிக காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியம். தொடர்ச்சியாக தினமும் 6 மணி நேரஉறக்கம் முக்கியம்.எஸ்.வி., கிளினிக்கில் செஞ்சேரிப்புத்துார் எம்.கிருஷ்ணன் நினைவு மருத்துவ மையம் நடத்தி வரும் இலவச மருத்துவ முகாம், இன்றுடன் (22ம் தேதி) நிறைவடைகிறது. 2,500 ரூபாய் மதிப்புள்ள பரிசோதனைகள், சிறப்பு மருத்துவரின் ஆலோசனை இலவசம். சிறப்பு மருத்துவ நிபுணர் பாலமுரளி, குழந்தைகள் சிறப்பு மருத்துவர் நளினி ஆகியோர் ஆலோசனை வழங்குவர். முன்பதிவுக்கு: 73971 94189. மருத்துவ ஆலோசனை நாளை (23ம் தேதி) வழங்கப்படும். மருத்துவமனையில் 24 மணி நேர அவசர சிகிச்சைப்பிரிவு, உலகத்தரம் கொண்டு தீவிர சிகிச்சைப்பிரிவு, நெஞ்சு வலி, சர்க்கரை நோய்களுக்கான சிறப்பு கிளி னிக், குழந்தைகள் சிறப்பு மருத்துவம், குழந்தை திறன் வளர் கிளினிக் உள்ளிட்டவை உள்ளன.