உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வனத்திற்குள் வீட்டு மனை வதந்தியால் திரண்ட மக்கள்

வனத்திற்குள் வீட்டு மனை வதந்தியால் திரண்ட மக்கள்

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்திமலை அடிவாரத்தில், ஆபத்தான நீரோட்டம் உள்ள காண்டூர் கால்வாய் மற்றும் வன எல்லையை ஒட்டி, வருவாய்த்துறைக்கு சொந்தமாக, 11 ஏக்கர் பரப்பளவில் கல்லாங்குத்து காடு உள்ளது.மலை, பள்ளம் என கரடுமுரடான பகுதியில், வீட்டு மனை பட்டா வழங்க உள்ளதாக நேற்று வதந்தி பரவியது. இதனால், அதிகாலை முதலே, தளி, திருமூர்த்திநகர், தினைக்குளம், மொடக்குப்பட்டி, எரிசனம்பட்டி, தேவனுார்புதுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள் அப்பகுதியில் திரண்டனர். கற்கள் கொண்டு அடையாளம் வைத்து, தங்களுக்கான இடத்தை தேர்வு செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அங்கு வந்த வனத்துறையினர், 'இது யானைகள் முகாமிடும் பகுதி. காட்டுப்பன்றி, மான், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதி. கிளம்புங்கள்' என, எச்சரித்து அனுப்பினர். தளி பேரூராட்சியை சேர்ந்த ஆளுங்கட்சியினர், மக்களிடம் இந்த வதந்தியை கிளப்பியதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ