உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆளுமை திறன் வளர்ப்பு பயிற்சி கருத்தரங்கம்

ஆளுமை திறன் வளர்ப்பு பயிற்சி கருத்தரங்கம்

உடுமலை: உடுமலை, பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில், நாட்டு நல பணி திட்டத்தின் சார்பில், ஆளுமை திறன் வளர்ப்பு பயிற்சி கருத்தரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஜான்பாஷா வரவேற்றார்.  முதுகலை தமிழ் ஆசிரியர் சரவணன் முன்னிலை வகித்தார். தேஜஸ் ரோட்டரி சங்கத்தலைவர் சம்பத் குமார்,  சமூக ஊடகங்களை பயன்படுத்தும் முறை, போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், தேஜஸ் ரோட்டரி சங்க பட்டயத்தலைவர் சக்கரபாணி, மாணவர்கள் ஆளுமைத்திறன் வளர்ப்பு குறித்து பேசினார். போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பான கட்டுரைப் போட்டி, சொற்றொடர் எழுதுதல், ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் புதிய ரோட்ராக்ட் தலைவராக மாணவி லத்திகா தேர்வு செய்யப்பட்டார். உதவி தலைமை ஆசிரியர் ஜெகநாதா ஆழ்வார் சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !