பேரூர் ஆதினம் சாந்தலிங்கர் நுாற்றாண்டு விழா
அவிநாசி; அவிநாசி அடுத்த சேவூரில், குருபாதம் சித்தர் மடம் அறக்கட்டளை சார்பில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுாற்றாண்டு விழா, திருவாசகம் முற்றோதல், திருவிளக்கு கூட்டுப் பிரார்த்தனை வழிபாடு நடந்தது.வரன்பாளையம் திருநாவுக்கரசு திருமடம் மவுனானந்தா குருமடம் சிவாசல அடிகளார் தலைமை வகித்தார். அகில பாரத சாதுக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் வெள்ளியங்கிரி சுவாமிகள் முன்னிலை வகித்தார்.ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமர குருபர அடிகளார், செஞ்சேரிமலை திருநாவுக் கரசர் நந்தவனம் திருமடம் முத்து சிவராமசாமி அடிகளார், அவிநாசி திருப்புக் கொளியூர் வாகீசர் மடாலய ஆதினம் காமாட்சி தாச அடிகளார், கோவை காமாட்சிபுரம் ஆதினம் பஞ்ச லிங்கேஸ்வர சுவாமிகள், பொங்கலுார் அகில உலக ஆன்மிக பேரவை தெய்வ சிகாமணி சுவாமிகள், லட்சுமிபுரம் அருள்ஜோதி தபோவனம் மூர்த்திலிங்கம் சுவாமிகள், மருதமலை அடிவாரம் பிரம்ம ஞான அறக்கட்டளை ஏழுமலை சுவாமிகள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேராசிரியர் திலகவதி, சிவகாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.அகில பாரத சாதுக்கள் கூட்டமைப்பு சார்பில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. தீரன் சின்னமலை கவுண்டர் கலைக்குழுவின் கம்பத்தாட்டம் நிகழ்ச்சி நடந்தது.