உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆமை வேகத்தில் குழாய் பதிக்கும் பணி; தொடர் விபத்தால் மக்கள் கடும் பாதிப்பு

ஆமை வேகத்தில் குழாய் பதிக்கும் பணி; தொடர் விபத்தால் மக்கள் கடும் பாதிப்பு

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 10வது வார்டு, அனுப்பர்பாளையம் முதல் ஆத்துப்பாளையம் வரை குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வரும் நிலையில், மோசமான ரோட்டால், தினமும் விபத்து ஏற்படுவதாக, பொதுமக்கள் கூறுகின்றனர்.அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறியதாவது:அனுப்பர்பாளையம் முதல் ஆத்துப்பாளையம் வரை குடிநீர் குழாய் பதிக்க கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ரோட்டில் குழி தோண்டப்பட்டது. பிரதான குழாய் பதிக்கப்பட்ட பின், தற்போது வீட்டு இணைப்புக்காக குழாய் பதிக்க மீண்டும் தோண்டி வருகின்றனர்.ஒப்பந்ததாரர் பணியை தொடர்ந்து செய்வதில்லை. இரண்டு நாட்கள் செய்கின்றனர். பின்னர் அப்படியே போட்டு விட்டு வேறு பகுதிக்கு சென்று விடுகின்றனர். மீண்டும் ஒரு வாரம் கழித்து செய்கின்றனர். இவ்வாறு விட்டுவிட்டு பணியை செய்வதால், பணி பல மாதங்களாக நடைப்பெற்று வருகிறது.குழாய் பதிக்க ரோடு தோண்டப்பட்டதால், ரோடு முழுவதும் குண் டும், குழியுமாக உள்ளது. இப்பகுதி அதிக வீடுகள் மற்றும் போக்குவரத்து நிறைந்த பகுதி. எப்போதும் வாகன போக்கு வரத்து நிறைந்த பகுதி.ஏற்கனவே வாகனங்கள் மிகவும் சிரமத்துடன் செல்லும் நிலையில், மோசமான ரோட்டால், டூவீலரில் செல்வோர் தொடர் விபத்தை சந்தித்து வருகின்றனர். எனவே குழாய் பதிக்கும் பணியை விரைவாக முடித்து, ரோட்டை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை