உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனைவியை கத்தியால் குத்திய கொடூர கணவர் * போலீசார் விசாரணை

மனைவியை கத்தியால் குத்திய கொடூர கணவர் * போலீசார் விசாரணை

திருப்பூர்:தன்னுடன் வாழ மறுத்த மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர், இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராணி, 36. திருமணமாகி குழந்தைகள் உள்ளது. முதல் கணவரை பிரிந்த நிலையில், 11 ஆண்டுக்கு முன்பு கருப்பையா என்பவருடன் வாழ்ந்து வந்தார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நான்கு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இச்சூழலில், நேற்று முன்தினம் செல்வராணி வீட்டுக்கு வந்த கருப்பையா, தன்னுடன் வந்து வாழுமாறு செல்வராணியை கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு செல்வராணி மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில், தான் தயாராக கொண்டு சென்ற கத்தியால் செல்வராணியின் வயிற்றில் குத்தினார். இதில், படுகாயமடைந்த செல்வராணி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கருப்பையாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை