மேலும் செய்திகள்
கடலுார் துறைமுகத்தில் படகு எரிந்து சேதம்
03-Mar-2025
அவிநாசி: சேவூர் அருகே தண்டுக்காரன்பாளையம், தலைவர் தோட்டத்து பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கு சொந்தமான கடைகள் சேவூரில் இருந்து புளியம்பட்டி செல்லும் ரோட்டில் சந்தை பாளையத்தில் உள்ளது.அதில், பாலக்காட்டை சேர்ந்தவர்கள் சிப்ஸ் மற்றும் பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கடைகளில் இருந்து கரும் புகை வெளியேறியது. சற்று நேரத்தில் தீ மளமளவென பற்றியது. இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவிநாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள் எரிந்து சேதமானது.தீ விபத்து குறித்துசேவூர் போலீசார் விசா ரித்து வருகின்றனர்.
03-Mar-2025