பொங்கலுார் ஸ்ரீ அன்னபூரணீஸ் ஸ்வீட்ஸ் புதிய கிளை திறப்பு
திருப்பூர்:பொங்கலுார் ஸ்ரீ அன்னபூரணீஸ் ஸ்வீட்ஸ் புதிய கிளை திறப்பு விழா திருப்பூரில் நேற்று நடந்தது.பொங்கலுாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொங்கலுார் ஸ்ரீஅன்னபூரணீஸ் ஸ்வீட்ஸ், திருப்பூர் அவிநாசி ரோடு, காந்தி நகரில், திருப்பூரின் மூன்றாவது கிளையைத் துவங்கியுள்ளது. திறப்பு விழா நேற்று காலை நடந்தது. முதல் விற்பனையை தீபம் காம்பேக்டர் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் பெற்று கொண்டார். ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் திருக்குமரன் உட்பட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர். நிறுவன நிர்வாக இயக்குனர் பிரனேஷ், சுகன்யா ஆகியோர் வரவேற்றனர். பாலகிருஷ்ணன், சுகந்தி, பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உரிமையாளர்கள் கூறியதாவது:புதிய கிளை திறப்பு விழாவை முன்னிட்டு இன்று வரை அனைத்து பர்ச்சேசுக்கும் கிப்ட் பாக்ஸ் வழங்கப்படுகிறது. பொங்கலுார் ஸ்ரீஅன்னபூரணீஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில், 200க்கும் மேற்பட்ட இனிப்பு கார வகைகள் உள்ளன. இங்கு பத்து விதமான லட்டு வகை, ஒன்பது விதமான கஜூ ஸ்வீட்ஸ், எட்டு விதமான சிறு தானிய இனிப்பு, ஏழு விதமான மைசூர்பாகு, ஆறு விதமான அல்வா.ஐந்து வகை பக்லவா இனிப்புகள், நான்கு வகை கருப்பட்டி ஸ்வீட்ஸ் மூன்று வகை போளி, இரண்டு வகை ஜிலேபி உள்ளிட்ட இனிப்பு மற்றும் பல்வேறு வகை கார வகைகள் வாடிக்கையாளர்கள் ருசிக்கும் விதத்தில் கிடைக்கும். விவரங்களுக்கு 98422 88009 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.----திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகரில் பொங்கலுார் ஸ்ரீ அன்னபூரணீஸ் ஸ்வீட்ஸ் கிளை திறப்பு விழா நேற்று நடந்தது. முதல் விற்பனையை தீபம் காம்பேக்டர் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார். அருகில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கப் பொதுச்செயலாளர் திருக்குமரன், பொங்கலுார் ஸ்ரீஅன்னபூரணீஸ் ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் பிரனேஷ் உள்ளிட்டோர்.