உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏற்றுமதி ஆடைகள் அனுப்புவதில் சிக்கல்

ஏற்றுமதி ஆடைகள் அனுப்புவதில் சிக்கல்

''ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட பிற நாடுகளில் ஏற்படும் பிரச்னை, ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் எதிரொலிக்கிறது'' என்று கூறுகிறார், திருப்பூர் வேலம்பாளையத்தில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும், ரஞ்சித்.அவர் கூறியதாவது:சிறு, குறு தொழில் வர்த்தகத்துக்கு மத்திய அரசு பெரும் ஊக்குவிப்பை வழங்கி வருகிறது. ஆடை வர்த்தகம் மேற்கொள்ள வங்கிக்கடன் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. இருப்பினும், உலக நாடுகளின் நிலவும் பிரச்னை, ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் எதிரொலிக்கிறது. 'ஆர்டர்' கொடுக்கும் ஏற்றுமதி வர்த்தகர்களுக்கு சரியான தேதியில் ஆடைகளை அனுப்ப வேண்டும். உக்ரைன், இஸ்ரேல் போர் உள்ளிட்ட பிற நாடுகளில் நிலவும் பிரச்னைகளால், ஆடைகளை அனுப்புவதில் சிரமம் உள்ளது.ஆடை ஏற்றுமதி போக்குவரத்தில் சில பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறோம். துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக தான் ஆடைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறோம். 'கன்டெய்னர்' கிடைப்பதில் உள்ள பிரச்னையால், மும்பைக்கு சரக்குகளை அனுப்பி அங்கிருந்து அனுப்ப வேண்டியிருக்கிறது; இதனால், இருநாள் காலதாமதமாவதுடன், செலவும் அதிகரிக்கிறது; 'ஷிப்மென்ட்' பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். 'கோவிட்' பரவலுக்கு முன் இருந்த 'ஆர்டர்', அதற்கு பின் குறைந்திருக்கிறது. மின் கட்டண உயர்வும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி