மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கவில்லை
07-Aug-2024
உடுமலை;அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, கல்வியாண்டு தோறும் நான்கு செட் சீருடைகள் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், மூன்று மாதங்களான நிலையிலும் சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.இதனால், மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவதிலும் சிரமம் ஏற்பட்டது. விரைவில் சீருடை வழங்க வேண்டுமென பெற்றோரும் தொடர்ந்து வலியுறுத்தினர்.இந்நிலையில், நேற்று உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு 'செட்' சீருடை மட்டும் வழங்கப்பட்டது. விரைவில், நிலுவை சீருடை வழங்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
07-Aug-2024