உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ராதாகிருஷ்ணன் விருது; 48 ஆசிரியர் பரிந்துரை

ராதாகிருஷ்ணன் விருது; 48 ஆசிரியர் பரிந்துரை

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ராதாகிருஷ்ணன் விருதுக்கு, 48 ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.செப்., 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருதும், மாநில அரசு, மாநில நல்லாசிரியர் (ராதாகிருஷ்ணன் விருதும்) வழங்குகிறது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர், ஆசிரியர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவாக இவ்விருது சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அரசால் வழங்கப்படுகிறது.நடப்பாண்டுக்கான விருதுக்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 48 ஆசிரியர்களின் பெயர்கள் மாவட்ட கல்வித்துறை மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 11 ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நிலையில், நடப்பாண்டு எவ்வளவு பேர் விருது பெற போகிறார்கள் என்ற விவரம் ஓரிரு நாளில் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை