ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
உடுமலை: உடுமலை உழவர்சந்தை ரோட்டில், காலை நேரங்களில் அமைக்கப்படும் தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகே உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் வருகின்றனர். உழவர்சந்தையின் வெளியில், ரோட்டில் காலை நேரங்களில் தற்காலிக காய்கறி உட்பட பல்வேறு கடைகள் போடப்படுகின்றன. இதனால், மக்கள் நடந்து செல்ல முடியாமலும், பிற வாகனங்கள் செல்வதிலும் திணற வேண்டிய நிலை ஏற்படுகிறது. நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நகராட்சி அதிகாரிகள் இந்த தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.