உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சர்வோதய சங்க ஊழியர்களுக்கு சங்கடம் விற்பனை மையத்தை மூடி போராட்டம்

சர்வோதய சங்க ஊழியர்களுக்கு சங்கடம் விற்பனை மையத்தை மூடி போராட்டம்

திருப்பூர்;தமிழ்நாடு சர்வோதய சங்க நிர்வாகத்தின் மெத்தனத்தை கண்டித்து, விற்பனை மைய ஊழியர்கள், மையங்களை பூட்டி, சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழ்நாடு சர்வதோய சங்கம், திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகரில் தலைமை அலுவலகத்துடன் செயல்படுகிறது. இதன் விற்பனை மையங்கள், காந்தி நகர், ஈஸ்வரன் கோவில் வீதி, வீரபாண்டி ஆகிய இடங்களில் உள்ளது. இவற்றில், காலணி, மர பர்னிச்சர், கைவினை பொருள், கதர் துணி ஆகியன விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த, 2 ஆண்டாக இச்சங்கம் சார்பில் எந்த பொருளும் உற்பத்தி செய்யப்படாமல் உற்பத்தி மையங்கள் மூடிக்கிடக்கின்றன. இதனை நம்பி உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் வேறு வேலை தேடிச் செல்கின்றனர். இதனால், விற்பனை மையங்களில் விற்பனை பாதிக்கிறது. மையங்களுக்கு பொருள் உற்பத்தி செய்தவர்களுக்கு உரிய தொகை வழங்கப்படாமல் உள்ளது உட்பட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணக் கோரி, விற்பனை மையங்களை பூட்டி விட்டு அதன் ஊழியர்கள் நேற்று சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதோய சங்க ஊழியர்கள் கூறியதாவது:சங்க நிர்வாகம் எதையும் கண்டு கொள்வதில்லை. வெறும் கட்டட வாடகையை மட்டும் வாங்கி அலுவலக நிர்வாகத்தை நடத்துகின்றனர். சங்கத்தின் சொத்துகள் பலவகையில் பறிபோகிறது. இவற்றுக்கு தீர்வு காண வலியுறுத்தி, நிர்வாகத்தை கண்டித்து அஹிம்சை வழியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறோம். பண்டிகை காலம் என்பதால், விற்பனை மையங்களில் கூடுதல் வியாபாரம் நடக்கும். ஆனால், சங்க நிர்வாகம் இது குறித்து எந்த அக்கறையும் செலுத்தவில்லை. உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் தகவல் அறிந்து செயலாளர் அலுவலகத்துக்கே வராமல் உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ