குறுமைய போட்டி; மாணவ, மாணவியர் அசத்தல்
உடுமலை குறுமைய அளவிலான கேரம் போட்டியில், அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர்.உடுமலை குறுமைய அளவிலான கேரம் போட்டிகள், வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில் இரண்டு நாட்கள் நடந்தது.மாணவர்களுக்கான போட்டியில், ஒற்றையர் ஆட்டத்தில் ஜூனியர் பிரிவில், ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், சீனியர் பிரிவில், குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடம், சோழமாதேவி அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பிடித்தது.சூப்பர் சீனியர் பிரிவில், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், புங்கமுத்துார் காந்திகலா நிலைய மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன.மாணவர்களுக்கான போட்டி இரட்டையர் ஆட்டத்தில், ஜூனியர் பிரிவில், குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடம், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், சீனியர் பிரிவில், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம், குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.சூப்பர் சீனியர் பிரிவில், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், புங்கமுத்துார் காந்திகலா நிலையம் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன.* மாணவியருக்கான ஒற்றையர் ஆட்டத்தில், ஜூனியர் பிரிவில், சோழமாதேவி அரசு பள்ளி முதலிடம், உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், சீனியர் பிரிவில், உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி முதலிடத்திலும், உடுமலை ஆர்.ஜி.எம்., மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம், சூப்பர் சீனியர் பிரிவில், புங்கமுத்துார் காந்திகலா நிலையம் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.மாணவியருக்கான இரட்டையர் ஆட்டம் ஜூனியர் பிரிவில், குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடம், கணியூர் வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், சீனியர் பிரிவில் புங்கமுத்துார் காந்திகலா நிலையம் மேல்நிலைப்பள்ளி முதலிடம், கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடம், சூப்பர் சீனியர் பிரிவில், காந்திகலா நிலையம் மேல்நிலைப்பள்ளி முதலிடத்திலும், உடுமலை எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர். பொள்ளாச்சி
பொள்ளாச்சி கிழக்கு குறு மைய அளவிலான தடகளப்போட்டி, சிறுக்களந்தை விக்னேஷ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. மாணவர் பிரிவு போட்டி முடிவுகள்:* 80 மீ., தடை தாண்டுதல், 14 வயது பிரிவில், எஸ்.வி.எச்.எஸ்., சுதர்ஷன் முதலிடம், வித்யநேத்ரா பள்ளி சஞ்சீவ் இரண்டாமிடம், எஸ்.வி.எச்.எஸ்., கவுரீஷ் மூன்றாமிடம்.* 110 மீ., தடை தாண்டுதல், 17 வயது பிரிவில், எஸ்.ஆர்.என்.வி., திவாகர் முதலிடம், கஞ்சம்பட்டி அரசு பள்ளி தமிழ்க்குமரன் இரண்டாமிடம், ஏ.எம்.எஸ்., கிரித்வின் மூன்றாமிடம். 19 வயது பிரிவில், குட்ெஷப்பர்டு பள்ளி ஜோசுவா முதலிடம், சங்கவி வித்யா மந்திர் தருண்வேல் இரண்டாமிடம், விஸ்வதீப்தி பள்ளி பரத் மூன்றாமிடம்.* 400 மீ., தடை தாண்டுதல், 19 வயது பிரிவில், எஸ்.ஆர்.என்.வி., பிரசாந்த் முதலிடம், எஸ்.சி.எம்., பிரகதீஷ்வர் இரண்டாமிடம், விஸ்வதீப்தி பள்ளி நிஷாந்த் மூன்றாமிடம்.* 1,500 மீ., ஓட்டம், 17 வயது பிரிவில், எல்.எம்.எச்.எஸ்., கிருஷ்ணா முதலிடம், விஸ்வதீப்தி பள்ளி மாணவர்கள் அபிேஷக் இரண்டாமிடம், கவுதம் மூன்றாமிடம். 19 வயது பிரிவில், எஸ்.ஆர்.என்.வி., பிரசாந்த் முதலிடம், எஸ்.சி.எம்., பள்ளி திருமலைச்சாமி இரண்டாமிடம், பொள்ளாச்சி அரசு பள்ளி சிவக்குமார் மூன்றாமிடம்.* மும்முறை தாண்டுதல், 17 வயது பிரிவில், விஸ்வதீப்தி ரோஷன் முதலிடம், எல்.எம்.எச்.எஸ்., மாணவர்கள் விஷ்ணுவர்த்தன் இரண்டாமிடம், அகிலன் மூன்றாமிடம். 19 வயது பிரிவில், பொள்ளாச்சி அரசு பள்ளி மாணவர்கள் நவீன்குமார் முதலிடம், சஞ்சய்குமார் இரண்டாமிடம், விஸ்வதீப்தி பரத் மூன்றாமிடம்.* வட்டு எறிதல், 14 வயது பிரிவில், ஏ.எம்.எஸ்., ஹரிராமன் முதலிடம், கோலார்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் சியாம் இரண்டாமிடம், நிகிலேஷ் மூன்றாமிடம்.17 வயது பிரிவில், வெங்கிட்ராஜ் பள்ளி அம்ரித் முதலிடம், கோலார்பட்டி அரசு பள்ளி தரணீஸ்வரன் இரண்டாமிடம், எல்.எம்.எச்.எஸ்., மனவ் மூன்றாமிடம். 19 வயது பிரிவில், எஸ்.ஆர்.என்.வி., ஹரிஹரசுதன் முதலிடம், விஸ்வதீப்தி பரணிராஜ் இரண்டாமிடம், எஸ்.சி.எம்., பள்ளி திருமலைசாமி மூன்றாமிடம் பிடித்தனர்.