சிறுகதைகள் நுால் அறிமுக விழா
திருப்பூர்:வாசகர் சிந்தனை பேரவை, ஏ.வி.பி., குடியிருப்போர் நலசங்கம் சார்பில், திருப்பூர் சிறுகதைகள் நுால் அறிமுக விழா நடந்தது.புதிய நுால்களுக்கான கட்டுரைகள் வாசிக்கப்பட்டு, சிறுகதை எழுதியவருக்கு பரிசு வழங்கப்பட்டது. மாவட்டத்தை சேர்ந்த, 28 எழுத்தாளர்களின் சிறுகதைகள் வெளியிடப்பட்டன. சுப்ரபாரதிமணியன், அழகுபாண்டி, அரசப்பன் உள்ளிட்டோரின் நுால்கள் வெளியிடப்பட்டன.கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன், குறளினி, தனபாக்கியம், மீன்கொடி பாண்டியராஜன் உள்ளிட்டோர் பேசினர். தமிழ் பேராயம் புதுமைப்பித்தன் விருது பெற்ற சுப்ரபாரதி மணியனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.*