உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுதானிய உணவே சிறந்தது

சிறுதானிய உணவே சிறந்தது

திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு - -2 சார்பில், 'போஷன் மா' குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லுாரி பேராசிரியர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,' 'உடல் ஆரோக்கியமாக இருக்க இயற்கையான பழ வகை, காய்கறி சாப்பிட வேண்டும். அன்றாட உணவு பழக்கத்தில் சிறுதானிய உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்,'' என்றார்.முன்னதாக பேராசிரியர்கள் முஸ்தாக், சக்தி செல்வம், சந்தனமாரி, தீபக் உள்ளிட்டோர் பேசினர். 'சிறு தானிய உணவுகளை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி, மனதிறன் வளர்ச்சி, அறிவாற்றல் ஆகியவை மேம்படும் என்பதை நன்கு அறிவேன்,' என மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.---ஊட்டச்சத்து மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், உறுதிமொழி எடுத்து கொண்ட மாணவ, மாணவியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ