மாணவர்களுக்கு சிறப்பு ேஹாமம்
உடுமலை, ;உடுமலை காந்திநகர் வரசித்தி விநாயகர் கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பூஜை நடந்தது.இக்கோவிலில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு சிறப்பு ேஹாமம் நடந்தது. குருதட்சிணாமூர்த்தி, சரஸ்வதி ஹயக்ரீவர் சுவாமிகளுக்கு கல்விக்கான ேஹாமம், உடல் ஆரோக்கியம் மேம்படுவதற்கான ஆயுஸ் ேஹாமமும் நடந்தது.மாணவர்களின் பெயர் மற்றும் நட்சத்திரங்கள் சங்கல்பம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. மாணவர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. வழிபாட்டில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ேஹாமத்தில் பங்கேற்று வழிபட்டனர்.