உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ சின்னண்ணன் பெரியண்ணன் கோவில் பொங்கல் விழா

ஸ்ரீ சின்னண்ணன் பெரியண்ணன் கோவில் பொங்கல் விழா

அனுப்பர்பாளையம் : திருப்பூர், அவிநாசி ரோடு, அம்மாபாளையத்தில் ஸ்ரீ சின்னண்ணன், ஸ்ரீ பெரியண்ணன் கோவில் பொங்கல் விழா, கடந்த மாதம் 23 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.நேற்று காலை 9:00 மணிக்கு கிளி பிடித்தல், மதியம் 12:00 மணிக்கு உச்சி கரும்பு குடித்தல், 1:00 மணிக்கு பன்றி குத்துதல், 1:30 மணிக்கு பரனை கரும்பு குடித்தல், மாலை 3:00 மணிக்கு களி பூஜை, இரவு 10:00 மணிக்கு படுகளம் பாய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சியில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அம்மாபாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ