மேலும் செய்திகள்
பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள் சாதனை
10-Feb-2025
திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஸ்ரீ குரு சர்வா அகாடமி சி.ஏ., படிப்புக்கென்றே முழுநேர பயிற்சி வகுப்புகளுடன் இயங்கி வருகிறது.இந்த அகாடமியில் படித்து, கடந்த ஜன., 25ல் நடந்த சி.ஏ., பவுண்டேஷன் தேர்வு எழுதிய, மாணவி மகாலட்சுமி, 400க்கு, 335 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார். எட்டு மாணவர்கள் 'டிஸ்டிங்ஷனில்' தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். பிரதன்யா - 309, சுதர்சனா - 305, சஷ்டிகா - 294, அக் ஷயா - 282, புராராம் - 282, ஆர்த்தி - 279, ஸ்ரீவத்ஷா - 279 மதிப்பெண் பெற்று முதல் எட்டு இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.மேலும் இன்டர்தேர்வில் ஒரே முயற்சியிலேயே இரண்டு குரூப்புகளிலும், 11 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மதுமிதா, 600 க்கு, 414 மதிப்பெண் பெற்று முதலிடம். ஏஞ்சல் - 391, கங்காதேவி - 385, ரித்திகா - 326, ரித்துன் - 326, கீர்த்திவாசன் - 326, தர்ஷா - 317, ஜனார்த்தனன் - 316, சாந்தனி அகர்வால் - 315, கோகுல் - 310, பரத்ராஜ் - 302 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்ட்டிங் பாடப்பிரிவில், மதுமிதா, 100க்கு, 97 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்திருக்கிறார். இக்கல்வி நிறுவனம் பவுண்டேசன் தேர்வில் தொடர்ந்து, 11 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று வருவதோடு, ஏற்கனவே சி.ஏ., இன்டர் தேர்வில் தேசிய அளவில், 23 வது இடம் பிடித்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.நல்ல அனுபவம் வாய்ந்த ஆடிட்டர்களால் வகுப்பு எடுக்கப்படுவதோடு அடிக்கடி மாதிரித்தேர்வுகள் நடத்துவதாலும், ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிக்கவனம் செலுத்தப்படுவதாலும், இச்சாதனைகளை தொடர்ந்து, 11 ஆண்டாக இக்கல்வி நிறுவனம் சாதித்து வருகிறது. தற்போது, பவுண்டேஷன் மற்றும் இன்டர்பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு 96009 22888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி நிறுவனம் தெரிவித்துள்ளது.
10-Feb-2025