உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு உயர்நிலை பள்ளியில் கண்காணிப்பு கேமரா

அரசு உயர்நிலை பள்ளியில் கண்காணிப்பு கேமரா

உடுமலை;குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, பள்ளி மேலாண்மைக்குழுவின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.சங்கராமநல்லுார் பேரூராட்சிக்குட்பட்ட குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.விழாவில் சங்கராமநல்லுார் பேரூராட்சித்தலைவர் மல்லிகா, துணைத்தலைவர் பிரேமலதா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கண்ணீஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் தாமோதரன், தலைமையாசிரியர் ராஜேந்திரன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.மாணவர்களின் பாதுகாப்பு கருதி, கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக குழுவினர் தெரிவித்தனர். பெற்றோரும் இதை வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ