மேலும் செய்திகள்
வெட்டப்படும் மரங்கள் அனுமதி தந்தது யார்?
10-Feb-2025
பல்லடம்:பல்லடம் வட்டார பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலை ஓரங்களில், நுாற்றுக்கணக்கான புளிய மரங்கள் உள்ளன.இவை, ஆண்டுதோறும் நெடுஞ்சாலை துறையால் ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்கும் வியாபாரிகள், புளிய மரங்களில் கிடைக்கும் புளியை பறித்து பயனடைந்து கொள்ளலாம். இவ்வாறு, ஒவ்வொரு ஆண்டும் புளி பறிக்கும் பணி கோடை காலத்துக்கு முன்பாகவே துவங்கும். இவ்வகையில், நடப்பு ஆண்டு புளி பரிப்பு சீசன் நிறைவடைய உள்ள நிலையில், விளைச்சல் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், 'பொதுவாக, ஜன., முதல் மார்ச் வரை புளி அறுவடைக்கு தயாராக இருக்கும். இக்காலகட்டத்தில் புளி பறிக்கும் பணி மேற்கொள்ளப்படும். சராசரியாக, ஒரு மரத்துக்கு, 100 கிலோ புளி கிடைக்கும். கடந்த ஆண்டு போதிய மழை கிடைக்காததால், பூக்கள் கருகிவிட்டன. இதனால், 30 சதவீதத்துக்கு மேல் விளைச்சல் குறைந்துள்ளது. பறித்த புளி கிலோ, 30 ரூபாய்க்கும், சுத்தம் செய்யப்பட்ட தோசை புளி, கிலோ 110 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம்,' என்றார்.
10-Feb-2025