உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழ் தேர்வு எளிது: மாணவர் மகிழ்ச்சி

தமிழ் தேர்வு எளிது: மாணவர் மகிழ்ச்சி

திருப்பூர்; நேற்று நடந்த பிளஸ் 2 தமிழ் தேர்வெழுதிய மாணவியர், 'தேர்வு எளிமையாக இருந்தது. முந்தைய ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட முக்கிய வினாக்களே மீண்டும் கேட்கப்பட்டிருந்தது. தமிழில் கூடுதல் மதிப்பெண் பெற முடியும்,' என, தெரிவித்தனர்.ஆர்த்தி: முந்தைய ஆறு ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாள்களில் இடம் பெற்ற கேள்விகளே, நேற்றைய தேர்வில் கேட்கப்பட்டிருந்தது. ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண்ணில் எதிர்பார்த்து கேள்விகளே இடம் பெற்றிருந்தது. திருப்புதல் தேர்வு, முந்தைய ஆண்டு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் என்பதால், எளிதில் விடை எழுதினேன். நிச்சயம், 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும்.காயத்ரி: ஒவ்வொரு பாடங்களுக்கு பின் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், ஏற்கனவே பல முறை பயிற்சி பெற்ற நான்கு மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. குறு, நெடுவினா உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் எளிமையாக இருந்ததால், பதட்டமில்லாமல் தேர்வை எதிர்கொள்ள முடிந்தது. நிச்சயம், 85க்கும் மேல் மதிப்பெண்களை பெற முடியும்.பரந்தாமன், தமிழாசிரியர், பொல்லிகாளிபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி:முதல் இரண்டு (யூனிட்) பாடங்களை முழுமையாக படித்திருந்தாலே, தேர்ச்சி பெற்றிட முடியும். காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாளை போல, பொதுத்தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்தது.தமிழில் சென்டம் பெறும் மாணவரை சற்று யோசிக்க வைக்கும் வகையில் ஒரு மதிப்பெண்ணில், நான்கு வினாக்களும், நெடுவினாவில், 'உன் குடும்பத்தாருக்கு உன்னால் இயன்ற உதவியை நீ எவ்வாறு செய்வாய்'? என்ற கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது; இவை, புத்தகங்களுக்குள் இருந்து கேட்கப்பட்டாலும், நன்கு படித்த மாணவர்கள் யோசித்து எழுதிவிடுவர். பிளஸ் 2 தமிழில் நடப்பாண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.காணாமல் போனஆங்கில தமிழாக்கம்பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதும் மாணவ, மாணவியர் தமிழில் சென்டம் பெறுவதற்கு சவால் விடும் வகையில், வினாத்தாள் மாற்றப்பட்டிருந்தது. வழக்கமாக, நான்கு மதிப் பெண்ணில் 'சாய்ஸ்' கேள்விகளில் ஒன்றாக, ஆங்கில பழமொழி கொடுத்து, தமிழாக்கம் எழுதும் வினா கேட்கப்படும்; காலாண்டு, அரையாண்டு தேர்வில் இடம் பெற்ற இவ்வினா, நேற்றைய பொதுத்தேர்வில் இடம் பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ