மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
28-Aug-2024
உடுமலை:பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் மற்றும் கணிதத்திறன்களை மேம்படுத்திக்கொள்வதற்கான திறனறித்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன் அடிப்படையில், நடப்பாண்டில் தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வு அக்., 19ம் தேதி நடக்கிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.தேர்வில் வெற்றி பெறும், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இரண்டு கல்வியாண்டுக்கு, மாதந்தோறும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், 1,500 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுகின்றனர்.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று (5ம் தேதி) முதல் செப்., 19ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளின் மாணவர்களை, இத்தேர்வுக்கு ஊக்குவிப்பதற்கும், தேர்வில் பங்கேற்பதற்கும் ஆசிரியர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.
28-Aug-2024