மேலும் செய்திகள்
சொட்டுநீர் பாசனத்தில் நிலக்கடலை சாகுபடி!
17-Feb-2025
உடுமலை; முகூர்த்த சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்பதை இலக்காக கொண்டு, கொத்தமல்லி தழையை விவசாயிகள் சுழற்சி முறையில் சாகுபடி செய்கின்றனர். உடுமலை சுற்றுப்பகுதிகளில், மானாவாரியாகவும், கிணற்றுப்பாசனத்துக்கும், கொத்தமல்லி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மானாவாரியில், பெரும்பாலும், கொத்தமல்லி விதை தேவைக்காக சாகுபடி செய்கின்றனர்.கிணற்றுப்பாசனத்தில், தழை உற்பத்திக்காக விதைப்பு செய்யப்படுகிறது. வீரிய ரக விதைகளே இச்சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது.முகூர்த்த சீசனில் தழை மல்லிக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், திட்டமிட்டு, சுழற்சி முறையில், இச்சாகுபடியை உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'தழை மல்லி சாகுபடியில், ஏக்கருக்கு, 6 ஆயிரம் கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். தழை வாடும் முன்பே, அறுவடை செய்து சந்தைப்படுத்தி விட வேண்டும்,' என்றனர்.
17-Feb-2025