உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொது உறுப்பினர் கூட்டம் வார்டு நிர்வாகிகளுக்கு பரிசு

பொது உறுப்பினர் கூட்டம் வார்டு நிர்வாகிகளுக்கு பரிசு

உடுமலை:உடுமலை நகர தி.மு.க., சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் நடந்தது. நகரச்செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார்.இதில், பொள்ளாச்சி லோக்சபா தேர்தலில், உடுமலை நகரில், 65 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுக்கள் பெற்றுத்தருபவர்களுக்கு, பரிசு வழங்கப்படும் என நகரச்செயலாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அதிக ஓட்டுக்கள் பெற்றுத்தந்த, 16 வார்டு நிர்வாகிகளுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இந்நிழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் பத்மநாபன், எம்.பி., ஈஸ்வரசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ